உக்திசார்ந்த பங்காளர்கள்

சோழமண்டலம் இண்வெஸ்ட்மென்ட் அண்டு ஃபினான்ஸ் கம்பெனி லிமிடெட்டைப் பற்றி

சோழமண்டலம் இண்வெஸ்ட்மென்ட் அண்டு ஃபினான்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் முருகப்பா குழுமத்தின் நிதி சேவைகள் பிரிவாக 1978இல் உருவாக்கப்பட்டது. 1900 இல் துவங்கப்பட்ட, ரூபாய் 269 பில்லியன் மதிப்பிலான முருகப்பா குழுமம் இந்தியாவின் முன்னனி பெருந் தொழில்நிறுவனங்களுல் ஒன்றாகும்.

சோழா நிறுவனம் 25,000 கோடிகளையும் விட அதிகமா இந்திய ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை மேலாண்மை செய்துகொண்டு இந்தியா முழுவதிலும் உள்ள 534 கிளைகளின் மூலமாக செயல்படுகிறது. சோழமண்டலத்தின் துணை நிறுவனங்களில் சோழமண்டலம் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (CSEC) மற்றும் சோழமண்டலம் டிஸ்ட்ரிப்யூஷன் சர்விசஸ் லிமிடெட் (CDSL) நிறுவனங்களும் அடங்கும். சோழாவிற்கு நாடு முழுவதும் 7.5 லட்சத்தையும் விட அதிகமான வளர்ந்துவரும் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

சோழா சாதனங்களுக்கு நிதி வழங்கும் ஒரு நிறுவனமாக துவங்கியது மேலும் இன்றைக்கு வாகன நிதியுதவி, வீட்டுக் கடன்கள், வீட்டுப் பங்குக் கடன்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழிற் கடன்கள், முதலீட்டு ஆலோசனை சேவைகள், பங்குவர்த்தக தரகு மற்றும் இதர பல்வேறு நிதி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஒரு முழுமையான நிதி சேவை வழங்கும் நிறுவனமாக உருவாகியுள்ளது.

முகவரி:

ஒயிட் டேட்டா சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
எண்-3 லஷ்மிபுரம் முதல் சந்து, ராயபேட்டை, சென்னை-600014

தொலைபேசி:

1800 313 0203

மின்னஞ்சல்:

[email protected]